/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட் மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
/
எஸ்டேட் மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
எஸ்டேட் மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
எஸ்டேட் மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
ADDED : ஜூலை 15, 2025 09:33 PM
வால்பாறை; எஸ்டேட் மேலாளரைக்கண்டித்து தொழிலாளர்கள், திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது வறட்டுப்பாறை காபி எஸ்டேட். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த எஸ்டேட் மேலாளர், தொழிலாளர்களை பணி நேரத்தில் தரக்குறைவாக பேசி வருவதாக கூறப்படுகிறது. அவரின் இந்த செயலை கண்டித்து தொழிலாளர்கள் நேற்று காலை எஸ்டேட் மஸ்டரை முற்றுகையிட்டு, திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், தொழிற்சங்க தலைவர்கள் சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,) ஜெகன்னாதன்(ஏ.டி.பி.,), பரமசிவம்(சி.ஐ.டி.யு.,), ஆகியோர், தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறு நடக்காது என தோட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.