/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதுங்கும் சிறுத்தையால் பதறும் தொழிலாளர்கள்
/
பதுங்கும் சிறுத்தையால் பதறும் தொழிலாளர்கள்
ADDED : செப் 07, 2025 09:16 PM
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத்அலி - ரோகமாலா தம்பதியரின் மகன் நுார்சல்ஹக், 8, என்ற சிறுவன், கடந்த மாதம் 13ம் தேதி மாலை வனவிலங்கு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவனை கொன்றது சிறுத்தையா அல்லது கரடியா என்பது கண்டறியும் வகையில், வனத்துறை சார்பில் சம்பவம் நடந்த பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக சிறுவன் பலியான இடத்தில் சிறுத்தை நடமாடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
சிறுவனை கொன்றது சிறுத்தையா, கரடியா என்பது தெரியாத நிலையில், மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை நடமாடுகிறது. இதனால், பள்ளி முடிந்த பின் குழந்தைகள் வீடு திரும்ப முடியாமலும், மாலை நேரத்தில் வீடுகளின் முன்பு விளையாட முடியாமலும் தவிக்கின்றனர்.
எனவே, எஸ்டேட் பகுதியில் மீண்டும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க தொழிலாளர் குடியிருப்பில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.