ADDED : ஆக 07, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில், தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
ரோட்டரி கிளப் தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார். முதன்மை மருத்துவர் வாணி தலைமை வகித்து, பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தாய்ப்பாலின் அவசியம் குறித்து ஹிந்துஸ்தான் கலையேறிவியல் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

