/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
ADDED : டிச 04, 2024 10:19 PM

பெ.நா.பாளையம்; கவுண்டம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் வளாகத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செயல்படும் இம்மையத்தில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகா தலைமை வகித்தார்.
கல்வி பிரிவின் வட்டார ஒருங்கிணைப்பாளர் நித்யா முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆர்த்தி அனைவரையும் வரவேற்றார். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு கல்வி ஆசிரியர் சித்ரா பேசினார்.
தொடர்ந்து, மாற்று திறனாளிகளின் நலன் குறித்த உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். இதை அடுத்து மாற்று திறன் குழந்தைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு கல்வி ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார். விழாவில், ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறைக்கு உட்பட்ட, காரமடை வட்டார வள மையத்தின் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா, மையத்தில் நடந்தது. காரமடை வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, நகராட்சி இளநிலை உதவியாளர் ஜெயராமன் பரிசுகளை வழங்கி பேசினார்.
விழா ஏற்பாடுகளை காரமடை வட்டார வள மையம் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.