sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக சுற்றுச்சூழல் தினம்; பசுமையை காக்க மரக்கன்று நடவு

/

உலக சுற்றுச்சூழல் தினம்; பசுமையை காக்க மரக்கன்று நடவு

உலக சுற்றுச்சூழல் தினம்; பசுமையை காக்க மரக்கன்று நடவு

உலக சுற்றுச்சூழல் தினம்; பசுமையை காக்க மரக்கன்று நடவு


ADDED : ஜூன் 06, 2025 05:41 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி நகராட்சி சார்பில், நல்லுார் உரக்கிடங்கில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன், கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, நேற்று, 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம், 4,770 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர் நல அலுவலர் தாமரை கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

* பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம், ஏ.பி.டி., சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதிகாரிகள் பங்கேற்றனர்.

* தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மாணவர்களிடையே ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. மரங்கள் குறித்து அறிந்து கொள்ள, 'க்யூஆர்' கோடு உருவாக்கப்பட்டு ஒட்டப்பட்டன. பசுமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு பேரணிக்கு, தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விளக்கினர்.

* ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்து, மரக்கன்றுகளை நடவு செய்தார். மனோன்மணியம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், பசுமை உறுதிமொழி வாசித்தார். விதை பந்துகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் ஒழிப்பு பாடல்கள், பசுமை ஒழிப்பு திருக்குறளை மாணவர்கள் வாசித்தனர். விழிப்புணர்வு பேரணி நடந்தது. அறிவியல் ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.

* ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி குஞ்சிபாளையத்தில் நடந்தது. பொள்ளாச்சி ராமஜெயம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், ராமபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடவு நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் கண்ணன், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு


* கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, 34 ஊராட்சிகளுக்கும், 4,500 மகாக்கனி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி வருவாய் துறைக்கும் மரங்கன்றுகள் வழங்கப்பட்டது. இதை நீரோடை பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஜக்கோபி கார்பன் தனியார் நிறுவன ஹெச்.ஆர். இயக்குனர் டேனியல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியிலிருந்து பள்ளிக்கு வாட்டர் பியூரிபயர், மின்விசிறி, சோலார் லைட், கிரீன் போர்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

உடுமலை


* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். வேதியியல் ஆசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி வரவேற்றார்.

'சுற்றுச்சூழலும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் ஆசிரியர் ஜான்பாஷா விளக்கமளித்தார். பிளாஸ்டிக் தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கையை நேசிக்கவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் நன்றி தெரிவித்தார்.

* ஆண்டியகவுண்டனுார் துவக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் தங்கவேல் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் கல்பனா மரம் வளர்ப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.

* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து மாணவர்கள் பேசினர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு போட்டிகள் நடந்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியாக சென்று, உறுதிமொழி எடுத்தனர்.






      Dinamalar
      Follow us