/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தினம்
/
அரசு தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தினம்
ADDED : அக் 18, 2024 10:17 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில், உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக கை கழுவும் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள், கைகளை கழுவுதலில் உள்ள படிநிலைகளை செய்து காட்டினர். அதன்பின், மாணவர்கள் பயிற்சியில் பெற்ற திறன்களை சிறப்பாக செயல்விளக்கங்கள் அளித்தனர்.
நோயற்ற வாழ்வுக்கும், ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கும் கை கழுவுதல் அவசியமாகும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கைகளில் வாயிலாக பரவும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தொற்று நோய்கள் குறித்தும், பள்ளி ஆசிரியர் சத்தியா விளக்கம் அளித்தார். தலைமையாசிரியர் தினகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

