ADDED : ஏப் 10, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
அவ்வகையில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை மாணவிகள், ஆனைமலையில் பள்ளி குழந்தைகள் இடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் வகைகள் போன்ற இயற்கை உணவுகளின் முக்கியத்துவம்; தினசரி சுத்தம், சுத்தமான குடிநீர் பருகுதல், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கையான பழச்சாறுகள் பருகினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர். மேலும், சுகாதாரப் பழக்கங்களை இளம் வயதில் இருந்தே உருவாக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

