/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சுகாதார தின மராத்தான் போட்டி
/
உலக சுகாதார தின மராத்தான் போட்டி
ADDED : ஏப் 07, 2025 05:36 AM

கோவை; உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி சார்பில், மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
உலக சுகாதார தினம் ஆண்டு தோறும், ஏப்., 7 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு ஆரோக்கியமான துவக்கம், நம்பிக்கையான எதிர்காலம் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லுாரி சமூக மருத்துவத் துறை சார்பில், சமூக நலன் மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், 2.5 மற்றும் 5 கிமீ தூர மராத்தான் ஹேக்கத்தான் 2.0 புரோ நேற்று நடந்தது.
மராத்தானில், மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் என, 800 பேர் பங்கேற்றனர். மராத்தான் அவிநாசி ரோடு கோவை மருத்துவக் கல்லூரியில் துவங்கியது. கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் நிர்மலா போட்டியை துவங்கி வைத்து பேசினார்.
சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது