/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மரபு நாள்விழிப்புணர்வு பேரணி
/
உலக மரபு நாள்விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 19, 2025 03:11 AM

கோவை: உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி, ரேஸ்கோர்ஸில்நடந்தது.
யுனெஸ்கோ அமைப்பு நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள்,கோவில்கள், மண்டபங்கள் போன்ற மரபுதலங்களை பாதுகாக்கும் நோக்கில், ஏப்.,18 ஐ உலக மரபு நாளாக அறிவித்தது.
மக்களிடம் முறையான விழிப்புணர்வை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்துவதே, இதன் பிரதான நோக்கமாகும்.
ரேஸ்கோர்ஸ் பூங்கா அருகே பேரணியை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவர்கள்விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.
கூடுதல் கலெக்டர் சங்கேத்பல்வந்த் வாகே, மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதியார் பல்கலை வரலாற்றுத்துறை, சாந்தலிங்க அடிகளார் கல்லுாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி, அரசு கலை கல்லுாரிமாணவர்கள் பங்கேற்றனர்.

