/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சிறுநீரக தினம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
/
உலக சிறுநீரக தினம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : மார் 15, 2024 12:18 AM

கோவை;உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது.
சிறுநீரகம் தொடர்பான நோய், பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் இரண்டாம் வியாழன் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான உலக சிறுநீரக தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் ஈஸ்ட், கோவை கிட்னி சென்டர் மற்றும் கிட்னி டிரஸ்ட் சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.
பேரணியை, ரோட்டரி சங்க நிர்வாகிகள் செல்லராகவேந்திரன், மாருதி மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் முன் துவங்கிய இந்த பேரணி, வடவள்ளி வரை சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிடன் கிளப் வளாகத்தில் முடிந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

