
பெ.நா.பாளையம் : அனைத்து உலக ஓசோன் படல பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். அசோகபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சுற்றுச்சூழல் கல்வி திட்டம் சார்பில் உலக ஓசோன் தினம், 2024 கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கோவை கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி, ஓசோன் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், பள்ளியில் ஓசோன் தின விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், அசோகபுரம் மேல்நிலைப் பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.