/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக ஓசோன் தினம் பள்ளியில் கொண்டாட்டம்
/
உலக ஓசோன் தினம் பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2025 09:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் சத்தியா, ஓசோன் மண்டலம் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பாதுகாப்பு அடுக் கு மண்டலமாகும். அது பூமியை எவ்வாறு பாதுகாக்கிறது, ஓசோன் மண்டலம் பாதிக்கப்பட்டால், பூமியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள், மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க, மரம் வளர்ப்பதை ஒவ்வொரு மாணவரும் கடமையாக மேற்கொள்ள வேண்டும். காற்று மாசுபடுவதை தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.