sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக அமைதி தினம்; ஏராளமானோர் பங்கேற்பு

/

உலக அமைதி தினம்; ஏராளமானோர் பங்கேற்பு

உலக அமைதி தினம்; ஏராளமானோர் பங்கேற்பு

உலக அமைதி தினம்; ஏராளமானோர் பங்கேற்பு


ADDED : நவ 12, 2024 05:51 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்த ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பின், அதேபோன்று மற்றொரு போர் மீண்டும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நாடுகள் இணைந்து நவ., 11 ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன.

நேற்று நவ., 11 ம் தேதியை முன்னிட்டு காலை, 11:11 மணிக்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையில், இந்நிகழ்ச்சி நடந்தது.

உலக அமைதி குழு அமைப்பு சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதியை பிரதிபலிக்கும் வகையில், வெள்ளை நிற ஆடையில், கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் துறையினர், மருத்துவ துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள் என, 1,500 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காலை, 10:00 மணி முதல் தியான நிகழ்ச்சி நடந்தது. சரியாக 11:00 மணிக்கு அனைவரும் தங்களது மொபைல்போன்களை அனைத்து அமைதியை கடைப்பிடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள உலக அமைதி பீடம் நிறுவனர் குரு மகான் தலைமை வகித்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 8.5 கோடி பேர் இணையதளம் வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபை அங்கோலா, ஈராக், கோசோவோ, குவைத், ஈரான், எகிப்து, சிரியா, நியூயார்க், ஜெனிவா நாடுகளுக்கான அமைதி காப்பாளர் ராஜா ஆறுமுகம், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், கன்னியாகுமரி மாவட்டம் ஸ்வாமிதோப்பு அன்புவனத்தின் குரு மகா பீடாதிபதி பால பிரஜாபதி அடிகளார், தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை தலைவர் சந்திரன். திருமூர்த்தி மலை ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி, செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us