/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாட்டம்
/
உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாட்டம்
ADDED : செப் 29, 2025 12:35 AM
கோவை; தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில், உலக மருந்தாளுநர் தின விழா, கோவை ரயில்நிலையம் அருகிலுள்ள தாமஸ் பார்க்கில் நடந்தது.
இதில், கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, மருந்து கிடங்குகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் பங்கேற்றனர்.
மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மாரிமுத்து, இ.எஸ்.ஐ.,மருத்துவமனை ஆர்.எம்.ஓ., மணிவண்ணன், அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
'மருந்து சட்ட விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும், மருந்து சார்ந்த நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து நிலைகளிலும் மருந்தாளுநர்கள் மட்டுமே மருந்துகளை கையாள வேண்டும், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள,750க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் இடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்...' உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் வல்லவன், சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ஆல்டிரின் ஜோசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.