/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலகை ஆளும் கல்வி சி.எம்.சி., தரும் அற்புதம்
/
உலகை ஆளும் கல்வி சி.எம்.சி., தரும் அற்புதம்
ADDED : மார் 01, 2024 09:16 PM
தீத்திபாளையத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில், 18 ஏக்கர் பரப்பளவில் சி.எம்.சி., இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த பாடத்திட்டங்கள், அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகிறது.
சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம், உயர்தர ஸ்கேட்டிங் தளம் மற்றும் பிரமாண்ட கலையரங்கம் உள்ளன. மேம்படுத்தப்பட்ட கணிதம், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக் கூடங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளுக்கென பிரத்யேகமாக டோரா பார்க் விளையாட்டுப்பூங்கா அமைந்துள்ளது. புத்தக வாசிப்புக்கென நவீன டிஜிட்டல் நுாலகம் உள்ளது.
யோகா பயிற்சி, ஸ்கேட்டிங், கூடைப்பந்து, கராத்தே, சிலம்பம், வில்வித்தை, ஓவியம், நடனம் போன்ற இணைச் செயல்பாடுகள் திறமையான பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன. 'இன்றைய கல்வி நாளைய உலகை ஆள்வதற்கே' என்ற பள்ளியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது.

