/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சிட்டுக்குருவிகள் தின புத்தக வெளியீட்டு விழா
/
உலக சிட்டுக்குருவிகள் தின புத்தக வெளியீட்டு விழா
ADDED : மார் 23, 2025 11:23 PM

சூலுார் : உலக சிட்டுக்குருவிகள் தின விழா, புத்தக வெளியீட்டு விழா கலங்கலில் நடந்தது.
கலங்கல் கிரீன் பவுண்டேஷன், சிட்டுக்குருவிகள பாதுகாப்பு அமைப்பு, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை, மகிழ்வனம் தாவரவியல் பூங்கா, முல்லைவனம் தாவரவியல் பூங்கா, ஓ.டி.பி., பவுண்டேஷன் சார்பில், சிட்டுக்குருவிகள் தின விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா, கலங்கல் வனத்தில் நடந்தது. மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சூழலியல் ஆய்வாளர் சதாசிவம் எழுதிய 'குறுநரிகள் வாழ்ந்த காடு ' எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
பாலசுப்பிரமணியம், மயில்சாமி, பூபதி, திவ்யா, மருதாசலம் உள்ளிட்டோர் பேசினர். அனைவரும் சூழல் காக்கும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சிறுவர், சிறுமியர் பலர் பங்கேற்றனர். சிட்டுக்குருவி களுக்கான பெட்டிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.