/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக தண்ணீர் தின கிராம சபை ஒத்திவைப்பு
/
உலக தண்ணீர் தின கிராம சபை ஒத்திவைப்பு
ADDED : மார் 18, 2025 11:15 PM
சூலுார்; உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக, 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைக்க, கால அவகாசம் வேண்டும் என, பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கைகள் வந்தன.
நிர்வாக காரணங்களால், மார்ச் 23ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.