/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னபூர்னேஸ்வரியை அன்னையாக பாவித்து வழிபாடு; நவராத்திரி உற்சவம் இரண்டாம் நாளில் கோலாகலம்

ADDED : அக் 04, 2024 11:39 PM

கோவை : நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அன்னபூர்னேஸ்வரியை, அன்னையாக பாவித்து வழிபாடு செய்தனர் பக்தர்கள்.
ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள, அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நவராத்திரி உற்சவம், நேற்று முன் தினம் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹாலட்சுமி ஹோமமும், லட்சுமி நரசிம்மர் ஹோமமும் நடந்தது.
வேதவிற்பன்னர்கள், வேதபாடசாலையில் பயில்வோர் சூழ சண்டிஹோமம் நடந்தது. நிறைவாக சுவாமி அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
அன்னபூர்னேஸ்வரி அம்பாள் ரிஷபவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையும், மாலையும் சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் ஹோமங்களிலும், வழிபாடுகளிலும் பங்கேற்றனர்.
உலகை காத்தருளும் அன்னையான சக்தியை, பூஜிப்பதுதான் நவராத்திரியின் நோக்கம். அப்படிப்பட்ட சக்தியை சிறுமியாகவும், மங்கையாகவும், குருவாகவும் தாயாகவும் வணங்கலாம். இரண்டாம் நாளான நேற்று, துர்கை சொரூபமாக வீரத்தின் விளைநிலமாக போற்றி குருவாக வழிபட்டனர்.
கோவில் வளாகத்திலுள்ள யோக நரசிம்மருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சுவாமிக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார்.