ADDED : செப் 14, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
கோவை: வீடுகள் தோறும் விநாயகர் அகவல் பாராயணம் செய்தும், விநாயகருக்கு பிடித்தமான பதார்த்தங்களை படைத்தும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலை எழுந்து நீராடி, களிமண் விநாயகர் அல்லது வீடுகளில் வழக்கமாக வழிபடும் விநாயகர் சிலைக்கு வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், செம்பருத்தி, செவ்வந்தி மலர்களால் மாலை தொடுத்து அலங்கரித்து, விநாயகர் அகவல், ஸ்துதி, காயத்ரி பாராயணம் செய்து, கொழுக்கட்டை, சுண்டல், பாயசம், அப்பம், பொரி, அவல், விளாம்பழம், நாவல், வாழை பழங்களை படைத்து வழிபடுகின்றனர்.
