ADDED : மே 11, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பிறந்தநாள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் நலன் காக்க வேண்டும் என, மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு நடந்தது.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டும், இந்திய ராணுவ வீரர்கள் நலன் காக்க வேண்டியும், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்து நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து மாலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.