/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரட்டாசி பவுர்ணமி கோவில்களில் வழிபாடு
/
புரட்டாசி பவுர்ணமி கோவில்களில் வழிபாடு
ADDED : அக் 07, 2025 12:44 AM

வால்பாறை;வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில், புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 12:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு, காலை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரபூஜையும் நடைபெற்றது.
வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், சிறுவர்பூங்கா பராசக்தியம்மன் கோவில்களில் புரட்டாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.