/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிவெள்ளியையொட்டி கோவில்களில் வழிபாடு
/
ஆடிவெள்ளியையொட்டி கோவில்களில் வழிபாடு
ADDED : ஆக 15, 2025 09:09 PM

சூலூர்; சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக் கிழமையை யொட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன், ரங்கநாதபுரம் தங்க முத்து மாரியம்மன், சூலூர் மேற்கு மற்றும் பொன்ணாண்டாம்பாளையம், முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவில், செங்கத்துறை மாகாளியம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம் மன், பள்ளபாளையம் காமாட்சி அம்மன் மற்றும் சூலூர் குடலுருவி மாரியம்மன் கோவில்களில், நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதே போல், கோவையிலும் பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்காரங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.