ADDED : ஆக 17, 2025 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆவணி மாதப்பிறப்பையொட்டி, விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு நடந்தது.
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதப்பிறப்பு நாட்களில், விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு நடைபெறும்.
ஏகாதசிக்கு இணையான இப்புண்ணியகாலத்தில், மஹாவிஷ்ணுவை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும் என்கின்றன, நம் வேத சாஸ்திரங்கள். நேற்று காலை 5:30 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது.
சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திவ்யபிரபந்த பாராயணம், சாற்றுமறையோடு நிறைவடைந்தது. வெங்கடேசபெருமாள் ஸ்ரீதேவி பூ தேவி சமேதராக, எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.