/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைமகள், அலைமகள், கலைமகள் வழிபாடு: 9 நாளும் இனி கோவில்களில் கோலாகலம்
/
மலைமகள், அலைமகள், கலைமகள் வழிபாடு: 9 நாளும் இனி கோவில்களில் கோலாகலம்
மலைமகள், அலைமகள், கலைமகள் வழிபாடு: 9 நாளும் இனி கோவில்களில் கோலாகலம்
மலைமகள், அலைமகள், கலைமகள் வழிபாடு: 9 நாளும் இனி கோவில்களில் கோலாகலம்
ADDED : அக் 03, 2024 08:24 PM

கோவை:
புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது.
நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்திற்காக மஹா துர்க்கையையும் (மலைமகள்), அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை தேடித்தரும் மஹா லட்சுமியையும் (அலைமகள்), கடைசி மூன்று நாட்கள் கல்வியை தரும் கலைமகளான சரஸ்வதியையும் ஆராதனை செய்து வழிபடுகின்றனர்.
கோவையிலுள்ள அம்பாள் கோவில்களில் நேற்று துர்கை சொரூபத்தை போற்றும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நேற்று அதிகாலை 6:30 மணிக்கு சங்கல்பம், 7:00 மணிக்கு ஸ்ரீ சக்ரஅபிஷேகம், 8:00 மணிக்கு தேவிபாராயணம், 9:00 மணிக்கு சுவாசினி மற்றும் கன்னிகா பூஜையை தொடர்ந்து தின்டிஉற்சவம், மஹா தீபாராதனை அஷ்டவதானசேவை நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் வேள்விச்சாலை அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளும், லட்சார்ச்சனையும் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மங்கலப்பொருட்களும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையிலுள்ள காமாட்சிஅம்பாள், அன்னபூர்ணேஸ்வரி கோவில், பெரியகடைவீதி மகாளியம்மன், வைசியாள்வீதி வாசவிகன்னிகாபரமேஸ்வரி, தர்மராஜகோவில் வீதி காளியம்மன், கவுண்டம்பாளையம் சாந்திதுர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட கோவில்களில் துர்கைசொரூபமாக தேவி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

