/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆல்கொண்டமால் கோவிலில் உருவாரம் வைத்து வழிபாடு
/
ஆல்கொண்டமால் கோவிலில் உருவாரம் வைத்து வழிபாடு
ADDED : ஜன 18, 2024 12:50 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சிங்கையன்புதுார் ஆல்கொண்டமால் கோவிலில், கால்நடைகள் நோய் நீங்க உருவாரம் வைத்து வழிபட்டனர்.
கிணத்துக்கடவு, சிங்கையன்புதுாரில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மனிதர்களுக்கும், மாட்டுக்கும் நோய் ஏற்பட்டால், உருவாரம் வாங்கி வைத்து கிருஷ்ணரை வழிபட்டால், நோய் நீங்குவது ஐதீகமாக கருதப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது, மாடுகள் கன்று ஈன்றால், அந்த கன்றை சுவாமிக்கு நேர்ந்து விடுகின்றனர். அதன்படி நேற்று காணும் பொங்கல் அன்று கல்லாபுரம், சிங்கையன்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சுற்றி அழைத்து வந்த விவசாயிகள், சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் முன் சலகெருது நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளை கவரும் வகையில் பலுான் கடைகள், ராட்டினம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தது.
இதே போன்று, கோதவாடி ஊராட்சியில் உள்ள மாலை கோவிலிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.