/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டைரியில் எழுதலாம் சார்ஜ் போடலாம்!
/
டைரியில் எழுதலாம் சார்ஜ் போடலாம்!
ADDED : நவ 16, 2024 08:42 PM

கால மாற்றத்தில் நாம் தொலைத்த பொக்கிஷங்களில் ஒன்று, டைரி எழுதும் பழக்கம். தனிநபர் பயன்பாட்டுக்கு டைரி வாங்குவது குறைந்து விட்டாலும், பரிசாக வழங்குவது இன்றும் குறையவில்லை.
'கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் சின்ன கம்பெனிகள் வரை டைரியை அன்பளிப்பாக வழங்குவது அதிகரித்துள்ளது' என்கிறார் கோவையை சேர்ந்த டைரி உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையாளரான கணேஷ்குமார்.
அவர் மேலும் கூறியதாவது:
மூலப்பொருட்கள் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால், கடந்தாண்டு விலையிலேயே டைரிகள் விற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.40 முதல் ரூ.3,500 வரை கிடைக்கின்றன.
அன்பளிப்புக்கு மட்டுமின்றி தங்களது பிராண்டை புரோமோட் செய்யும் ஊடகமாக டைரியை நிறுவனங்கள் பார்க்கின்றன. வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் தங்களது பிராண்ட் பெயரில் டைரியை வாங்குகின்றனர்.
நடப்பாண்டு புதிய அறிமுகமாய் வந்துள்ளது எல்.இ.டி., லோகா டைரி. தரமான பியூர் லெதரில் வந்துள்ள இந்த டைரியில் பேப்பர் தீர்ந்தாலும், மீண்டும் நிரப்பிக் கொள்ளலாம். முகப்பு அட்டையில் கம்பெனியின் பெயரை எல்.இ.டி., லோகோவில் பொருத்திக் கொள்ளலாம். டைரியுடன் 'பவர் பேங்க்' வருகிறது. கடந்தாண்டு, நான்காயிரம் எம்.ஏ.எச்., பேட்டரிகள் வந்தன; தற்போது, 15 ஆயிரம் எம்.ஏ.எச்., வரை 'பவர் பேங்க்' வருகிறது.
ஒயர் மற்றும் டைப் சி, ஆண்ட்ராய்ட், ஐ போன் சார்ஜிங் கேபிள் உள்ளது. ஒயர்லெஸ் சார்ஜிங் ஆப்சனும் உள்ளது. எட்டு மற்றும், 16 ஜி.பி., பென் டிரைவ், மற்றும் மொபைல் ஸ்டாண்ட் ஆப்சனும் இருக்கிறது. உங்கள் டைரியில் உள்ள தகவலை பாதுகாக்க, பிங்கர் பிரிண்ட் லாக் வசதியும் உள்ளது. இந்த அன்பளிப்பு டைரிகள், ரூ.1,500 முதல் விலைக்கேற்ப பலவித ஆப்சன்களில் கிடைக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.