/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் இருக்கு'
/
'சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் இருக்கு'
'சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் இருக்கு'
'சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் இருக்கு'
ADDED : அக் 30, 2025 12:18 AM

கோவை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு, கோவை வரதராஜபுரம் சக்கரையார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கவிஞர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். எழுத்தாளர் சு.வேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், ''அந்தக்காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் போலவே, இன்றைக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இன்றைக்கு மக்கள் வாழ்க்கையில் அதிக நெருக்கடிகள் உள்ளன. அதை கடந்து செல்வதற்கான சூழ்நிலைகளை, உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள சிக்கல்கள், பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், இன்றைய எழுத்தாளர்களின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. முன்பை விட, இந்த சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பு, எழுத்தாளர்களுக்கு இன்றைக்கு அதிகம் உள்ளது,'' என்றார்.
கலை இலக்கிய பெருமன்ற மாநில பொரு ளாளர் ப.பா.ரமணி பேசுகையில், ''தமிழகத்தை பொறுத்தவரை எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு முக்கிய கடமைகள் உள்ளன. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதி, மத மோதல்கள் நடக்கின்றன. ஆணவக் கொலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் படைப்பாளர்கள் சமத்துவ சிந்தனையை வலியுறுத்தும் படைப்புகளை உருவாக்க வேண்டும். கோவை நீதிமன்றம் அருகே அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் கரீம், எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

