/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜில்லா தலைவர் பெயரில் பட்டா மாற்றித்தர விவசாயிகள் கோரிக்கை
/
ஜில்லா தலைவர் பெயரில் பட்டா மாற்றித்தர விவசாயிகள் கோரிக்கை
ஜில்லா தலைவர் பெயரில் பட்டா மாற்றித்தர விவசாயிகள் கோரிக்கை
ஜில்லா தலைவர் பெயரில் பட்டா மாற்றித்தர விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 30, 2025 12:19 AM
கோவை: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
மேட்டுப்பாளையம் தாலுகா, தோலம்பாளையம் கிராமத்தில், விவசாயிகள், பொதுமக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக அவரவர் வீடுகளில் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு பத்திரங்கள் உள்ளன. இவ்வீடுகளுக்கு ஊராட்சி சார்பில் கதவு எண் போடப்பட்டுள்ளது. வீட்டு வரி, தண்ணீர் வரி முறையாக செலுத்தி வருகின்றனர். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் இதே முகவரியில் வைத்துள்ளனர்.
சிட்டாவில் பட்டாதாரர் பெயர், கோயம்புத்துார் ஜில்லா போர்டு பிரசிடென்ட் என உள்ளது. இதனால், வீடுகளைப் புதுப்பிக்க கடன் பெறவோ, விற்பனை செய்யவோ, அரசு மானியங்களைப் பெறவோ, இயலாத சூழல் உள்ளது. அவரவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். அரசு கூடுதல் தலைமைச் செயலருக்கு மனு அளித்து, ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. தமிழக முதல்வர் தலையிட்டு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

