ADDED : அக் 30, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை அரசு மருத்துவமனை முன்புறப்பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்வதால், எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று காலை 9.30 மணியளவில், வடமாநில பெண் ஒருவர் வந்தார். மதுபோதையில் இருந்த அவர், அப்பகுதியில் நின்றிருந்த பலரையும் திட்டினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை கையில் இருந்த பொருட்களால் அடிக்க முயன்றார்.
அப்பகுதியில் இருந்த பலரும் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர். அதை பொருட்படுத்தாமல், சமாதானப்படுத்தியவர்களையும் அடிக்க முயன்றார். அரை மணி நேரத்துக்கும் மேல் அந்த பெண் செய்த அலப்பறையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

