/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம உதவியாளர் பணிக்கு வரும் 18ல் எழுத்து தேர்வு
/
கிராம உதவியாளர் பணிக்கு வரும் 18ல் எழுத்து தேர்வு
ADDED : செப் 15, 2025 10:31 PM
அன்னுார்; அன்னுார் தாலுகாவில், ஏழு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 18, 19ல் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
அன்னுார் தாலுகாவில், அன்னுார், எஸ். எஸ்.குளம், இடிகரை உள்ளிட்ட 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 15க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் ஏழு பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மொத்தம் 340 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாதது. சரியாக நிரப்பப்படாது உள்ளிட்ட காரணங்களால் 46 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 294 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதில் வருகிற 18ம் தேதி 150 பேருக்கும், 19ம் தேதி 144 பேருக்கும் எழுத்து தேர்வு அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் வாசித்தல், எழுதும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.தேர்வு நடத்துவதற்காக மூன்று தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் அக். 7ம் தேதி அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.