/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி
ADDED : ஜன 06, 2025 01:47 AM

தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், முக்தி ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், வரும் பிப்., 10ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில், பணிகள் முடிவடைய உள்ளது.
இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாகசாலை அமைப்பதற்காக கோவிலில் ஈசானிய மூலையில், கடந்த, டிச.,25ம் தேதி, முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதனையடுத்து, கும்பாபிஷேக யாகசாலை மண்டபம் பணி நேற்று துவங்கியது.
100 அடி நீளம், 80 அடி அகலம், 19½ அடி உயரத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்படுகிறது. யாகசாலை மண்டபத்தில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்படவுள்ளது.