/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம் வென்றார் யாழிசை; பெருமைப்படுகிறது கோவை
/
தங்கம் வென்றார் யாழிசை; பெருமைப்படுகிறது கோவை
ADDED : பிப் 12, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வெள்ளக்கோவிலில் நடந்த மாநில ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை மாணவி இரு தங்க பதக்கங்கள் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் மாநில அளவிலான 'ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-25' போட்டி நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், 10 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் பிரிவில், கோவை மாணவி யாழிசை 'குவாட்' போட்டியில் இரு தங்க பதக்கங்கள் வென்று, பெருமை சேர்த்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பயிற்சியாளர்கள் மாணவியை பாராட்டினர்.

