/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரி சார்பில் யோகா, ஆயுர்வேத பயிற்சி
/
சங்கரா கல்லுாரி சார்பில் யோகா, ஆயுர்வேத பயிற்சி
ADDED : ஜன 24, 2025 11:09 PM
கோவை; சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் யோகா அமைப்பு சார்பில், 'யோகாமற்றும் ஆயுர்வேத பயிற்சியில் ஒருங்கிணைந்த கல்வி அணுகுமுறைகள்' குறித்த, ஒரு நாள் தேசிய அளவிலான பயிலரங்கு நடத்தப்பட்டது.
ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., நிதியுதவியுடன் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் டாக்டர் நவ்யா, யோகா குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கினார். மூத்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அரவிந்த், பாரம்பரிய ஆயுர்வேதக் கொள்கைகளை, நவீன கல்வி நடைமுறைகளுடன் கலப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பயிற்சியில் கலந்து கொண்ட, 150 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

