/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுமையில் தளர்ச்சி, தடுமாற்றத்தை யோகா செய்வதால் தவிர்க்க முடியும்!
/
முதுமையில் தளர்ச்சி, தடுமாற்றத்தை யோகா செய்வதால் தவிர்க்க முடியும்!
முதுமையில் தளர்ச்சி, தடுமாற்றத்தை யோகா செய்வதால் தவிர்க்க முடியும்!
முதுமையில் தளர்ச்சி, தடுமாற்றத்தை யோகா செய்வதால் தவிர்க்க முடியும்!
ADDED : மே 04, 2025 12:44 AM

முதுமையை எவராலும் தவிர்க்க முடியாது. அதே சமயம், முதுமையில் ஏற்படும் உடல் மற்றும் மன தளர்ச்சி மற்றும் தடுமாற்றத்தை தவிர்க்க முடியும்.
வயது முதிர்ச்சி அடையும் போது, உடல் பலவீனம் அடைகிறது. உடல் உறுப்புகளின் செயல்திறன்களும் குறைந்து விடுகின்றன. உடல் பலவீனம் அடைவதால், மனதிலும் சோர்வு ஒட்டிக்கொள்கிறது.
முதுமையில், உடல் மட்டுமின்றி மன நலனிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தளர்ச்சி, தடுமாற்றங்களை தவிர்க்க யோகா பயிற்சி, நல்ல தீர்வாக அமையும்.
இதுகுறித்து, யோகா பயிற்சியாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:
நம் உடலில் ஓட்டம் இருக்கும் வரை, ஆயிரம் பிரச்னைகளை இழுத்து போட்டுக்கொண்டு இருப்போம். ஆனால், ஆரோக்கியம் கெட்டுப்போனால் நம் ஒரே பிரச்னை அதுவாக மட்டுமே இருக்கும். அப்போது, பிற பிரச்னைகள் ஒன்றும் இல்லை என்பதை உணர்வோம்.
இதுபோன்று, பிரச்னைகள் வரும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே உடல், மன நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
மனஅழுத்தம், மன இறுக்கம், அதிகமாகும் போது உடல் ரீதியாகவும் பிரச்னைகள் வந்துவிடும். சின்ன, சின்ன விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு, உளவியல் பிரச்னைகளுக்குள் சிக்கிக்கொள்வார்கள்.
இதற்கு யோகா பயிற்சிகளை செய்வது, சரியான தீர்வு. யோகா பயிற்சி மூளைக்கு புத்துணர்வு அளிக்கும். சில ஆசனங்கள் உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். முதுமையில் மூட்டுகள், தசை, தசைநார்கள், நரம்புகள் தளர்வு ஏற்பட்டு வலி அதிகரிக்கும்.
யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதால், உடல் வலிமையை தக்கவைத்துக்கொள்ளலாம். மூச்சு பயிற்சி, பிரமாரி பிராணயாமா, உஜ்ஜாயி பிராணயாமா, போன்ற பல்வேறு பயிற்சிகள், முதுமை வயதை எட்டியவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.