மாணவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா
மாணவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா
ADDED : செப் 03, 2026 03:21 PM
வால்பாறை: சேலம் அரசு கல்லுாரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஷீலாபானு, வால்பாறை அரசு கலை அறியவில் கல்லுாரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, அறிவு திருக்கோவில் சார்பில் நடக்கும் யோகா பயிற்சியின் நிறைவு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி முதலவர் ஷீலாபானு பேசியதாவது:
யோகா பயிற்சி மாணவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் உள்ளம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், யோகா பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.
மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது, பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
விழாவில், உதவி பேராசிரியர்கள், யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
