/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன அழுத்தம் போக்க போலீசாருக்கு யோகா
/
மன அழுத்தம் போக்க போலீசாருக்கு யோகா
ADDED : அக் 26, 2024 11:27 PM

கோவை: போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், யோகா, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை மாநகர போலீசார், தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர மாநகர போலீஸ் சார்பில், பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது, ஓட்டம், விளையாட்டு என தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என, போலீஸ் கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களுக்கு மாநகர போலீஸ் சார்பில் மராத்தான், கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நேற்று போலீசாருக்கு பலூன் உடைத்தல், நடனமாடுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், யோகா, உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இப்பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.