/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேக்குறாங்க சார்!' கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி புகார்

ADDED : ஜன 25, 2024 06:41 AM
கோவை : மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக, இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, கலெக்டரிடம் முறையிட்டார்.
கலெக்டர் கிராந்திகுமாரிடம், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ் கொடுத்த மனு: நான், இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எனது தந்தைக்கு சொந்தமாக சுந்தராபுரத்தில் ஓட்டு வீடு உள்ளது. பெற்றோர் இறந்து விட்டனர்.
வீட்டுக்கான அசல் பத்திரம் தொலைந்து விட்டது; எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தேன். 13 மாதமாக விசாரணை என்ற பெயரில், கேட்ட சான்றுகளை கொடுத்து விட்டேன்.
50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள்; கொடுக்க முடியவில்லை. அதனால், எனது மனுவை ரத்து செய்து விட்டனர். எனது மனுவில் உள்ள சான்றுகளை கிழித்து விட்டு, மீண்டும் அலைக்கழிக்கின்றனர். எனவே, இம்மனுவை நேர்மையான அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, எஸ்.பி.,க்கு கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.