/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற வரும் 17 வரை விண்ணப்பிக்கலாம்
/
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற வரும் 17 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற வரும் 17 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற வரும் 17 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 13, 2025 11:49 PM
- - நமது நிருபர் -
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர்களின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மைய பொறுப்பாளர்கள் வாயிலாகவும் வரும், 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து கட்டணம், 275 ரூபாய். நடப்பாண்டு முதல், நேரடியாக மறுகூட்டல் விண்ணப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர், உடனடியாக உயர்கல்வியை தொடர ஏதுவாக ஜூன், 25 - ஜூலை 2 வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
நடந்த முடிந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் துணைத்தேர்வு எழுத இன்று (14ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். விபரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என, மாவட்ட கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.