sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

/

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 01, 2025 10:34 PM

Google News

ADDED : செப் 01, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோருக்கான தமிழக அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள், சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோரையும், தமிழகத்தில் சுற்றுலா தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் சுற்றுலா பயண முகவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.

சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர்கள், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா விளம்பர பொருள் போன்ற, 17 வகையான சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் சார்ந்தவர்கள், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்விருதுகள், உலக சுற்றுலா தினத்தன்று (27ம் தேதி) சென்னையில் வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.tntourismawards.com என்ற இணைய தளத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். கடைசி நாள் 15ம் தேதி. விபரங்களுக்கு, கோவை சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம். தொடர்புக்கு: 0422 - 2303176, 89398 96380.






      Dinamalar
      Follow us