/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு கடைக்கு அனுமதி பெற அக். 10க்குள் விண்ணப்பிக்கலாம்
/
பட்டாசு கடைக்கு அனுமதி பெற அக். 10க்குள் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடைக்கு அனுமதி பெற அக். 10க்குள் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடைக்கு அனுமதி பெற அக். 10க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 10, 2025 10:23 PM
கோவை; தீபாவளியை முன்னிட்டு, கோவை புறநகரில் பட்டாசு கடை அமைப்பவர்கள் அக்., 10க்குள் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை கலெக்டர் அறிக்கை:
அக்., 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவை புறநகர் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த அக்., 10க்குள் விண்ணப்பிக்கலாம்.
9 ச.மீ., முதல் 25 ச.மீ., வரை காலியிடம் இருப்பது அவசியம். கடைக்கான புல வரைபடம், சாலை வசதி, சுற்றுப்புற தன்மை, கடை கொள்ளளவு ஆகியவை தெளிவாக குறிப்பிட்டு, புல வரைபடம் இணைக்க வேண்டும்.
உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டடமாக இருப்பின் உரிமையாளர் சொத்து வரி செலுத்திய அசல் ரசீது, நகலுடன் கட்டட உரிமையாளரிடம், 20 ரூபாய்க்கான முத் திரைத்தாளில் பெற்ற, சம்மத கடிதம் வழங்க வேண்டும்.
மாடி கட்டடங்களில் பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. பட்டாசு கடை அமையும் இடத்தில் குடியிருப்புகளோ, பள்ளியோ, வழிபாட்டு தலமோ, திருமண மண்டபமோ, வணிக வளாகங்களோ இருக்கக் கூடாது.
திரையரங்கு, தொழிற்சாலை, ரயில்பாதை, நீர்வழி தேக்கங்கள், நிலத்தடி குழாய் வழித்தடங்கள், உயர்மின் அழுத்த கம்பி வழித்தடம், எளிதில் தீப்பற்றும் பொருள் உள்ள பகுதியோ, பேக்கரி, டீக்கடைகளோ இருக்கக்கூடாது. பட்டாசு கடைக்கு இருவழி ஏற்படுத்த வேண்டும். இணையத்தில் பதிவு செய்து, ஆன்லைனில் இ-சலான் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.