முனைவர் படிப்பு தகுதித்தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்
முனைவர் படிப்பு தகுதித்தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 04, 2026 08:05 PM
கோவை: பாரதியார் பல்கலையில் முனைவர் பட்ட படிப்புகளுக்கான பொதுத் தகுதித்தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை துறைகளிலும், பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் அங்கீகாரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேர முனைவர் பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப்படிப்புகளுக்கு 2026 -27ம் கல்வியாண்டிற்கான பொதுத்தகுதித் தேர்வு வரும் மே 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பொதுத் தகுதித் தேர்விற்கு நாளை முதல் ஏப்.,30ம் தேதி வரை பல்கலையின் https://fms.b-u.ac.in/cet என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சி.இ.டி., தேர்வு கணினி வழியில் கோவையில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் நடத்தப்படும் தேர்வு அட்டவணை குறித்து பல்கலை இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என, பாரதியார் பல்கலை தெரிவித்துள்ளது.
