/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
/
தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 13, 2025 07:45 AM
பொள்ளாச்சி: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 2026, ஜன., 10ம் தேதி நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டம் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வாகும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தேர்வை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் எதிர்கொண்டும் வருகின்றனர். 2025-26-ம் கல்வியாண்டிற்கான தேர்வு, 2026 ஜன., 10ம் தேதி நடக்கிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 'ஆன்லைன்' கட்டணத் தொகை 50 ரூபாயை சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம், 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

