/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 11, 2025 10:22 PM
பொள்ளாச்சி,; கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 331 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
கோவை மாவட்ட நிர்வாகம் அறிக்கை:
இப்பணிநியமனத்துக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒராண்டு காலத்துப்பின் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு, 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம், 3 கி.மீ-.,க்குள் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இம்மாதம் 28ம் தேதி கடைசி. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல் இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்று நகல்களை இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்பது அவசியம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

