/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழக்கம் போல் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்
/
வழக்கம் போல் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்
ADDED : ஜன 20, 2025 07:05 AM
கோவை : கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், இன்று முதல் கார்டுதாரர்களுக்கு வழக்கம் போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. இதனால், வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை, வழக்கம் போல் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள், வரும் 25ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை வாங்காதவர்கள், வழக்கமான ரேஷன் பொருட்கள் வாங்கும் போது, பொங்கல் தொகுப்பையம் சேர்த்து, 25ம் தேதிக்குள் வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.