/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வேட்டி, சேலையை 31 வரை வாங்கலாம்'
/
'வேட்டி, சேலையை 31 வரை வாங்கலாம்'
ADDED : ஜன 14, 2025 09:30 PM
பொள்ளாச்சி:
பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களுக்கு, பொங்கலுக்கு பிறகு வழங்குமாறு, இன்னும் உத்தரவு வரவில்லை, என, கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில், 11.12 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த முறை பொங்கல் தொகுப்புடன், பணம் கொடுக்காததால் பொங்கல் தொகுப்பு வாங்குவதில் கார்டுதாரர்கள் பலர் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ரேஷன் கார்டுதாரர்களின் வீட்டுக்கே சென்று, பொங்கல் தொகுப்பு வாங்கி கொள்ளும்படி, ரேஷன்கடை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடைக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களும், பணம் கொடுக்காவிட்டாலும், முந்திரி, திராட்சை, மண்டைவெல்லம் கொடுக்க வேண்டும் என, கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு திட்டங்களுக்கு எப்போதும் 'போஸ்' கொடுக்கும் ஆளும்கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இதனால், பொங்கல் பரிசு கொடுப்பதற்கு முன்வர தயங்குகின்றனர்.
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், இதுவரை, 8.98 லட்சம் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பு வாங்கி உள்ளனர். கடைக்கு வந்து வாங்க முடியாத முதியவர்களுக்கு, வீட்டுக்கு சென்று கொடுத்து இருக்கிறோம்.
வேட்டி, சேலை 70 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் 70 ஆயிரம் வேட்டி, சேலைகள் வந்துள்ளன. வேட்டி, சேலையை பொறுத்தவரை, 31ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களுக்கு, பொங்கலுக்கு பிறகும் கொடுக்குமாறு உத்தரவு வரவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.