/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜமாபந்தியில் நாளை மனு கொடுக்கலாம்
/
ஜமாபந்தியில் நாளை மனு கொடுக்கலாம்
ADDED : மே 18, 2025 10:04 PM
அன்னுார் ; அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நாளை நடைபெறும் ஜமாபந்தியில், அன்னுார் பேரூராட்சி மற்றும் 10 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மனு தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், வருவாய் துறை சார்பில், கிராம வாரியாக வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து, தணிக்கை செய்யும் ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜமாபந்தி நாளை துவங்குகிறது. நாளை காலை 10:00 மணி முதல் மதியம் வரை, அன்னுார் பேரூராட்சி மற்றும் பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குன்னத்தூர், பிள்ளையப்பன் பாளையம், கரியாம்பாளையம், காரேகவுண்டம் பாளையம், காட்டம்பட்டி, வடவள்ளி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.
'ஆன்லைன் வாயிலாக மனு அளித்தவர்கள், அதன் ஒப்புகை சீட்டுடன், ஜமா பந்தியில் பங்கேற்கலாம்,' என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.