/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பி.ஐ.எஸ். கேர்' செயலியில் தர முத்திரை கண்டறியலாம்
/
'பி.ஐ.எஸ். கேர்' செயலியில் தர முத்திரை கண்டறியலாம்
'பி.ஐ.எஸ். கேர்' செயலியில் தர முத்திரை கண்டறியலாம்
'பி.ஐ.எஸ். கேர்' செயலியில் தர முத்திரை கண்டறியலாம்
ADDED : அக் 30, 2025 12:13 AM
கோவை:  இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பில், உலக தர நிர்ணய தினம் கோவையில் கொண்டாடப்பட்டது. இதன் கோவை கிளை மூத்த இயக்குனர் பவானி பேசுகையில், ''தினமும் பல்வேறு பொருட்கள் வாங்குகிறோம். ஒவ்வொரு பொருட்களின் தரத்துக்கும் தர முத்திரை உள்ளது. இரும்பு சம்பந்தமான பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை, டிஜிட்டல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சி.ஆர்.எஸ். முத்திரை, தங்கத்துக்கு பி.ஐ.எஸ். தர முத்திரை பயன்படுத்துகிறோம். போலி தர முத்திரைகளை கண்டறிய, 'பி.ஐ.எஸ். கேர்' என்கிற செயலி அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் மூலம் பொருளின் தர முத்திரையை உறுதி செய்யலாம். யார் தயாரித்தது என்கிற விபரமும் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் எப்போதும் எந்த பொருட்களை வாங்கும்போதும் தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும்,'' என்றார்.
தர முத்திரைகளை பார்க்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. தர முத்திரைகள் தொடர்பாக பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.  கல்லுாரி மாணவ, மாணவியரின் பாடல், நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

