/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
'அயர்ன்' பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
/
'அயர்ன்' பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
UPDATED : செப் 28, 2025 09:13 AM
ADDED : செப் 28, 2025 05:46 AM

'சூப்பர் பாஸ்ட்' வாழ்க்கை முறையில், காலை நேரத்தில் அவசரமாக கிளம்பும்போது, ஆடைக்கு அயர்ன் செய்ய நேரம் ஒதுக்குவது,பலருக்கும் ஒரு பெரிய சவால்.
இதற்கு, ஒரு ஸ்டைலான தீர்வுதான், 'ரிங்கிள் ப்ரீ ஷர்ட்ஸ்' என்கிறார் பேஷன் டிசைனர் நந்தா.
பெயருக்கு ஏற்றபடியே, இந்த வகை சட்டைகளை துவைத்த பிறகும் சுருக்கங்கள் விழாது.
காலையில் அயர்ன் செய்ய வேண்டும் என்ற டென்ஷனே இல்லாமல், சட்டையை எடுத்து மாட்டி 'பிளாஷ்' வேகத்தில் ரெடியாகலாம்.
பைக் பயணம், பஸ் பயணம் என நாள் முழுவதும் எப்படி அலைந்தாலும், துணியில் சுருக்கமே இல்லாமல் பிரெஷ்ஷான, ஸ்மார்ட் லுக் 'மெயின்டெயின்' செய்ய முடியும் என்கிறார் நந்தா.