/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்ச் மாத மின் கட்டணமே செலுத்தலாம்
/
மார்ச் மாத மின் கட்டணமே செலுத்தலாம்
ADDED : மே 10, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை, மாநகர் இடையர்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், மே மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், ஜெ.ஜெ. நகர் பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், மார்ச் மாத மின் கட்டணத்தையே மே மாதத்துக்கும் செலுத்தலாம், என, மாநகர் செயற்பொறியாளர், பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.