/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேமராவுடன் ஒலிப்பெருக்கி அமைக்கலாம்! போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கைகொடுக்கும்
/
கேமராவுடன் ஒலிப்பெருக்கி அமைக்கலாம்! போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கைகொடுக்கும்
கேமராவுடன் ஒலிப்பெருக்கி அமைக்கலாம்! போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கைகொடுக்கும்
கேமராவுடன் ஒலிப்பெருக்கி அமைக்கலாம்! போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கைகொடுக்கும்
ADDED : ஆக 21, 2025 08:17 PM
பொள்ளாச்சி; போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஒலிபெருக்கி அமைத்து, விதிமீறலை ஒழுங்குபடுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்தம் செய்ய போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை. வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும், 'நோ பார்க்கிங்' என தெரிந்தும், வாகனங்கள் நிறுத்தம் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காந்திசிலை, உடுமலை ரோடு, கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு உள்ளிட்ட வழித்தடங்களில், போக்குவரத்து விதிமீறியே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், பிற வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
போக்குவரத்து போலீசார், அவ்வப்போது அபராதம் விதித்தாலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஒலிபெருக்கி அமைக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறை வாயிலாக போக்குவரத்து விதிமீறலை கண்டறிந்து, ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
போக்குவரத்து விதிமீறல் உள்ள இடங்களைக் கண்டறிந்து, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஒலிப்பெருக்கி அமைக்க வேண்டும். அப்போது, ஒரு சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தால், ஒலிபெருக்கி வாயிலாக மாற்று வழியை பயன்படுத்தவோ அல்லது வாகனங்களை மெதுவாக இயக்கவோ அறிவுறுத்தலாம்.
மேலும், ரவுண்டானா பகுதிகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கவும், வாகன ஓட்டுநர்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களை அளிக்க முடியும். விதிமீறி வாகனங்கள் நிறுத்துவதற்கும் கடிவாளம் போடலாம்.
இவ்வாறு, கூறினர்.